திங்கட்கிழமை பிரான்சில் கட்டாயம் பாடசாலைகள் ஆரம்பம் – கல்வியமைச்சர்!

பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள், விடுமுறை கழிந்து பாடசாகைள் ஆரம்பிப்பதை ஒரு வாரம் வரை ஒத்திவைத்துள்ளனர்.

ஆனால், பிரான்சில் நாளை கட்டாயம் பாடசாலைகள் ஆரம்பிக்கும் என கல்வியமைச்சர் ஜோன் மிசேல் புளோங்கே (Jean-Michel Blanquer) உறுதிப்படுத்தி உள்ளார்.

பாடசாலைகளில், சுகாதாரப் பாதுகாப்புப் பொறி முறைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அனைத்து மாணவர்களும் பாடசாலைகள் செல்வார்கள் எனக் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிற்கிடையில் கொரேனாத் தொற்று வீதம், மிகவும் குறைவாகவே உள்ளதாகவும், அதற்காக மிகவும், கண்டிப்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வியமைச்சர் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor