நிஜ ஜோடியாக மாறும் சீரியல் ஜோடி!

சீரியல்களில் ஜோடியாக நடித்து அதன்பின் நிஜ ஜோடியாகும் நிகழ்வுகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

சமீபத்தில்கூட ’ராஜா ராணி’ தொடரில் நடித்த கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்தது.

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு சீரியல் ஜோடி, நிஜ ஜோடியாக மாற உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களின் பேராதரவைப் பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் ’பூவே பூச்சூடவா’.

இந்த தொடரின் நாயகியாக நடித்து வரும் ரேஷ்மாவுக்கு இதே தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன்விஜய்க்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து அதன்பின் ’பூவே பூச்சூடவா’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா.

இவர் அதே சீரியலில் நடித்துவரும் மதன் விஜய்யுடன் காதலில் விழுந்துள்ளார்.

இதனை இருவருமே புத்தாண்டு பிறந்த நேரத்தில் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர் என்பதும் விரைவில் திருமணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ரேஷ்மா மற்றும் மதன்விஜய்க்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor