ஹீரோவாகிவிட்டார் பிக் பாஸ் ரன்னர்!

மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் இறுதிப் போட்டி வரை வந்தவர் நடன இயக்குனர் சாண்டி என்பது அனைவரும் அறிந்ததே.

ஆரம்பத்திலிருந்தே ஜாலியாகவும் மக்களுக்கு எண்டர்டெய்னராகவும் இருந்தவர் சாண்டி என்பதால் இவர் கண்டிப்பாக பிக் பாஸ் டைட்டில் வெல்வார் என்று அனைவரும் கருதினர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முகின் டைட்டிலை வென்றார் என்பதும், சாண்டி ரன்னர் நிலையை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனராக இருந்து வரும் சாண்டி விரைவில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சாண்டி ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.

சாண்டி ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தில் டைட்டில் 3.33 என்றும், இந்த படத்தை நம்பிக்கை சந்துரு என்பவர் இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor