கெட்டபுலா தோட்டத்தில் 75 பேர் இடம்பெயர்வு

நாவலப்பிட்டி – கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொங்காலை பிரிவில் 8ம் இலக்க லயன் தொடர் குடியிருப்பின் பின்புறத்தில் நேற்று (13) மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு குடியிருப்புகளில் வசித்து வந்த 75 பேர் வெளியேற்றப்பட்டதுடன், இவர்கள் கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya