வாண வேடிக்கைக்கு 2 கின்னஸ் விருதுகள் அறிவிப்பு!

அபுதாபியில் ஷேக் ஜாயித் பாரம்பரிய திருவிழாவில் 35 நிமிடங்கள் இடைவிடாமல் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் பாரம்பரிய கலாசாரங்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் விழாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த 16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 35 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற உலகின் மிக நீண்ட வாணவேடிக்கைக்கும், 2-வதாக வானில் சுழன்று கொண்டே செல்லும் வகையில் நீண்ட நேரம் நடத்தப்பட்ட வாணவேடிக்கைக்கும் கின்னஸ் சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor