BMW மகிழுந்து காட்சியறையில் தீ! – 40 மகிழுந்துகள் தீக்கிரை!!

Chambourcy நகரில் உள்ள மகிழுந்து காட்சியறை ஒன்றில் பலத்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை வருடத்தின் முதல் நாள் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Chambourcy (Yvelines) நகரில் உள்ள BMW நிறுவனத்தின் மகிழுந்து காட்சியறை ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
காலை 5.57 மணிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
1.500 சதுரமீற்றர் பரப்பளவு கொண்ட இந்த காட்சியறையில் ஏற்பட்ட தீயினால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 மகிழுந்துகள் எரிந்து, சேதமடைந்துள்ளன.

Recommended For You

About the Author: Editor