
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று வழங்கியிருந்த வாழ்த்துச் செய்தியில் சர்ச்சை எழுந்துள்ளது.
புதுவருடத்துக்கான வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்றைய தினம் வழங்கியிருந்தார்.
அதன் போது பிரெஞ்சு தேசிய கீதமான Marseillaise பாடல் பின்னணியில் ஒலித்தது.
இந்த தேசிய கீதம் பாடலாக இல்லாமல் வயயின் இசைக்கருவியில் வாசிக்கப்பட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வழமைபோன்று பாடல் இசைக்காமல் வயலின் கருவி ஊடாக இசைக்கப்பட்டது ஏன் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னர், பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஆசிரியர் Samuel Paty இன் இறுதிச் சடங்கின் போதும் தேசிய கீதம் வயலின் கருவியில் வாசிக்கப்பட்டது. இந்த புதுவருடம் அவரின் நினைவுகளுடன் ஆரம்பித்துள்ளதாகவும் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.