ப்ளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை..!!

இன்று ஜனவரி ஒன்று முதல் ஒருசில ப்ளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 2021 ஆம் ஆண்டு இன்று முதல் இந்த தடை நடமுறைக்கு வருகின்றது.
இதில் உறிஞ்சும் குழாய், உணவுகள் பொதி செய்யும் பெட்டிகள், சாண்ட்விச் பெட்டிகள், குளிர்பானங்கள் அருந்தும் குடுவைகள், மூடிகள், இறச்சி குத்தும் ப்ளாஸ்டி குச்சிகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. (  Pailles, couverts, touillettes, boîtes à sandwich, couvercles de boissons, tiges pour ballons, confettis, piques à steak en plastique)
அதேவேளை, கடைகளில் சேமிப்பில் உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், இந்த அனுமதி ஆறு மாத காலத்துக்கு மாத்திரமே செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor