
நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
மாஸ்டர் படம் பொங்கலையொட்டி வெளியாக உள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு முதல்வரிடம் விஜய் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். இதன்போது ‘அனேகமான திரைப்படங்கள் பலகோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே எல்லா திரைப்படத்தையும் கருத்தில் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என விஜய் கேட்டுக்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.