அத்திவரதரின் அறியப்படாத ஆச்சரிய தகவல்கள்..!

ஒருதடவையாவது பார்த்துவிடவேண்டும் என்று குவியும் முதியவர்கள் அடுத்த 40 ஆண்டு பிறகு தான் பார்க்க போகிறோம் என்று திரளும் இளைஞர்கள்..

கோயிலை நோக்கி படையெடுக்கும் பிரபலங்கள்.. 48 நாள் விழா கோலமாக காட்சியளிக்கும் காஞ்சிபுரம்.. இவை அனைத்திற்கும் ஒரே ஹீரோ “அத்திவரதர்”

40 வருடங்களுக்கு ஒருமுறை குளத்திலிருந்து எழுந்து பக்தர்களுக்கு காட்சிக் கொடுப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆராய தொடங்கினால் பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது..!

ஆம்…படைக்கும் கடவுள் பிரம்மா பூமியில் யாகம் செய்வதற்கு காஞ்சிபுரத்தை தேர்ந்தெடுக்கிறார்..யாகம் குறித்து தன் மனைவியான சரஸ்வதியிடம் மறைத்து விட்டார் என சொல்லப்படுகிறது இதனால் கோபமடைந்த சரஸ்வதி அம்மை யாகத்தை தடுக்க முயற்சிக்கிறார் .

அதை அறிந்த பிரம்மா பெருமாளின் உதவியை நாடுகிறார் உடனே பெருமாள் யாகத்தை காத்து அனைவருக்கும் அத்தீயிலியே அத்திவரதர் காட்சி அளித்ததாக புராணங்கள் சொல்லப்படுகிறது தனது யாகத்தைக் காத்த திருமாலை வணங்கித் தொழுததாகவும், வேண்டிய வரங்களைத் தந்ததால் பெருமாள் வரதர் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பிரம்ம தேவர் அதே திருக்கோலத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டதாகவும் ஆனால் யாக தீயில் காட்சி அளித்ததால் உஷ்னம் காரணமாக நீருக்கடியில் சென்றதாக கூறப்படுகிறது.

அத்தி மரத்தால் பெருமாளின் சிலை வடிவமைக்க பட்டதால் அத்தி எனவும் வரம் வழங்கியதால் வரதர் எனவும் சேர்த்து அத்திவரதர் என அழைக்கப்படுகிறார்.

இதனையடுத்து 1781 ஆண்டு குளத்திலுருந்து வெளியே எடுக்கப்பட்டதாக கல்வெட்டு தகவல்கல் கூறப்படுகிறது இதை தொடர்ந்து 1854 ,1892 , 1937 ,1979 ஆண்டுகளில் காட்சியளித்தார் என தகவல்கள்
சொல்லபடுகிறது .

அதன் பிறகு 2019 ஜூன் மாதம் 40 ஆண்டுகள் கழித்து காட்சிதருகிறார் அத்திவரதர், இவை காலம்காலமாக நடந்தாலும் 80 மற்றும் 90 களில் பிறந்தவர்களுக்கு இவை ஆன்மீக அதிசயம் என்றே பார்க்கப்படுகிறது…


Recommended For You

About the Author: Editor