தனது தந்தை தவறானவர்! மகள் தற்கொலை!

பெங்களூரில் தனது தந்தை தவறானவர் என வாட்ஸப்பில் பதிவிட்ட 12ம் வகுப்பு மாணவி, தனது தாய் மற்றும் சகோதரியுடன் இணைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பெங்களூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த சித்தையா என்பவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், மானசா, பூமிகா என்ற இரு மகள்களும் உள்ளனர்.

சித்தையாவுக்கு வேறொரு பெண்ணுடன் தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அனைவருக்கும் நல்ல தந்தையர்கள் இருப்பதாகவும், தனது தந்தை தங்கள் வாழ்வை சிதைத்து விட்டதாகவும், தங்கள் மூவரது இறப்புக்கும் தந்தை சித்தையா தான் காரணம் எனவும், 12ம் வகுப்பு பயிலும் மானசா வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

அதனை பார்த்த ராஜேஸ்வரியின் சகோதரர் புட்டாசுவாமி தனது சகோதரியின் வீட்டு விரைந்து சென்று பார்த்த போது, வீடு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

அதனை உடைத்து சென்று உள்ளே சென்ற போது தாயும், 2 மகள்களும் சடலமாக தூக்கில் தொங்கியுள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் சித்தையா வெளியூர் சென்றிருந்ததாகவும், கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதியர் சமீபத்தில் தான் மீண்டும் இணைந்ததாகவும் கூறப்படுகிறது


Recommended For You

About the Author: Editor