வனிதா பற்ற வச்ச நெருப்பு

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வரவு நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த அளவுக்கு உடனே பற்ற வைக்கும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

முகின் முன்னே அபிராமியின் அப்பாவித்தனத்தை அவர் பயன்படுத்தி கொண்டதாக வனிதா கூறியது, அதேபோல் அபிராமியிடம் நீ ஏன் அவன் பின்னால் ஓடுகிறாய்? உனக்கென்று ஒரு தனித்தன்மை இருப்பதாகவும் வனிதா கூறியதும் அபிராமியை பொங்கி எழ வைத்துவிட்டது.

குறிப்பாக முகினுக்கு வெளியே ஒரு காதல் இருப்பதை வனிதா மூலம் அறிந்து சுக்குநூறாய் போன அபிராமி, வனிதா கொடுத்த தைரியதால் முகினுடன் மோத ஆரம்பித்துவிட்டார்.

சபாஷ் இதுதான் உண்மையான ‘நேர் கொண்ட பார்வை’ அபிராமி’ என பார்வையாளர்கள் போற்றி வருகின்றனர்.

அபிராமியின் ஆவேசமான ஆத்திரமும், முகினின் ஆத்திரம் மற்றும் அழுகைக்கும் வனிதா ஒருவகையில் காரணமாக இருந்தாலும் இனிமேல் இருவரது பிக்பாஸ் வாழ்க்கையும் வெளியே சென்றவுடன் எதிர்கால வாழ்க்கையும் சரியான பாதையில் செல்லும் என கருதப்படுகிறது


Recommended For You

About the Author: Editor