திருமணம் குறித்து வரலட்சுமியின் அதிரடி அறிவிப்பு!

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். இவர் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்qகின்றார்.

இந்த நிலையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றாகிய ‘கன்னிராசி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நடிகை வரலட்சுமி இந்த படத்தின் இயக்குனர் எஸ்.முத்துகுமரன் என்ற புதுமுக இயக்குனர் என்றும் பொதுவாக புதுமுக இயக்குனர் படங்களில் நடிக்க தனக்கு அதிகம் பிடிக்கும் என்றும் கூறினார்.

மேலும் அவர் எழுதிய ஸ்கிரிப்ட்டை படிக்கும்போதே விழுந்து விழுந்து சிரித்ததாகமும், இந்த டீம் எப்படி எனர்ஜியாக இருக்கிறதோ அதேபோல் இந்த படமும் எனர்ஜியாக இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என்றாலும் நிஜ வாழ்வில் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும் தான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் அதிரடியாக நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

வரலட்சுமி தனக்கு திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து இருந்தாலும் அவரது தந்தை சரத்குமார் அதற்கு ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

விமல், வரலட்சுமி சரத்குமார், பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

செல்வகுமார் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor