மர்ம நபர்களால் புத்தர்சிலை உடைப்பு

ஹம்பாந்தோட்டை இரு புத்தர் சிலைகள் மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை, ருவன்புர உபரத்ன பௌத்த மத்திய நிலையத்திற்கு முன்னால் இருந்த புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

3 அடி உயரத்திலான புத்தர் சிலையை நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து குறித்த பௌத்த நிலையத்திலுள்ள தேரரினால் ஹம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேதப்படுத்தியமை தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாரால் என்ன நோக்கத்திற்காக சிலைகள் உடைக்கப்பட்டன என்பது தொடர்பில் இன்னமும் தகவல் வெளியாகியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor