கனரக வாகனத்துக்குள் சிக்கி எட்டுவயது சிறுவன் பலி..!!

எட்டு வயது சிறுவன் ஒருவன் கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு உயிரிழந்துள்ளான்.

Yvelines மாவட்டத்தின் Bazoches-sur-Guyonne எனும் சிறு நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை, எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளான்.

அப்போது வீதியில் வந்த கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு உயிரிழந்துள்ளான். விபத்து தொடர்பாக மேலதிக விபரங்கள் அறியமுடியவில்லை.

கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தும் கனரக வாகனம் ஒன்றிலேயே சிறுவன் சிக்குண்டுள்ளான்.

10:25 மணிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சிறுவனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

13 வயதுடைய அச்சிறுவனின் சகோதரி மற்றும் தாயார் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அவர்கள் உளநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor