தற்கொலைதாரிகளின் வீட்டை பார்வையிட்ட வெளிநாட்டவர்கள்!

சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளான வீட்டை இன்று(செவ்வாய்கிழமை) வெளிநாட்டு பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டனர்.

இதனை முன்னிட்டு, அங்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஏப்ரல் 26 ஆம் திகதி, சாய்ந்தமருது இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை பார்வையிடுவதற்காக வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று வருகைத் தந்திருந்தனர்.

புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் தாக்குதலுக்குள்ளான வீடு காணப்பட்ட நிலையில், அம்பாறை தடயவியல் பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களும் இன்று வருகைத் தந்திருந்தனர்.

இவர்கள், கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத பயிற்சி இடம்பெற்ற முகாம்களையும் பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக தாக்குதலுக்குள்ளான குறித்த வீட்டை இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் சென்று தொடர்ச்சியாக பார்வையிட்டு வருவதோடு, அதனை கண்காட்சி பொருளாக வெளிமாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பாதுகாப்புத் தரப்பினர் காண்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும். குறித்த வீட்டை புனரமைத்து கொடுப்பதற்காகவே அது பார்வையிடப்படுவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor