அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடல்

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடல் (13.09.2019) செப்டம்பர் 13ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இவ் ஒன்று கூடல் குறித்து கடந்த 11ம் திகதி தலைவர் ஆர்.சிவராஜா தலைமையில் இடம்பெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தின் போதே தெரிவிக்கப்பட்டது.

எனவே குழுத் தீர்மானத்திற்கு அமைய அனைத்துத் தமிழ் ஊடகவியலாளர்களும் தங்கள் பெயர் , முகவரி, தொடர்பு இலக்கம் அலுவலக முகவரி உட்பட அனைத்து விபரங்களுடன் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை இம்மாதம் 25ம் திகதிக்கு முன்பு சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வடமாகாண ஊடகவியலாளர்கள் தங்கள் பதிவுகளை வடமாகாண இணைப்பாளர்களான தர்மினி பத்மநாதன் (jaaltharmini@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் அல்லது 0776544158 என்ற இலக்கத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த யூட் நிமலன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

மேலும் தலைவர் ஆர்.சிவராஜா, செயலாளர் யோ.நிமல்ராஜ் (தினக்குரல்), பொருளாளர் ப.விக்னேஸ்வரன் (சூரியன்) மற்றும் மட்டக்களப்பு மாவட் ட இணைப்பாளர் எஸ்.மணிசேகரன் ஆகியோரையும் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Ananya