
பாகிஸ்தான் இராணுவத்தளபதிக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது
உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கசிய விட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேலும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி காமர் ஜாவத் பாஜ்வர் மீது உளவு பார்த்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பல முக்கிய தகவல்களை அவர் கசிய விட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து பாகிஸ்தான் சட்டத்தின்படி அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வுபெற்ற 2 இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது