ஜனாதிபதி மக்ரோனின் புகைப்படத்தை திருடிச் சென்ற இருவர் கைது..!!

நகர மண்டபம் ஒன்றில் இருந்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் புகைப்படம் திருடப்பட்டுள்ளது.

ஜூலை 23 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Collias (Gard), எனும் சிறு கிராமத்தின் நகசபையில் தொங்கவிடப்பட்டிருந்த மக்ரோனின் புகைப்படமே திருடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்தை இரண்டு நபர்கள் இணைந்து திருடிச்சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் சூழலியல் ஆர்வலர்கள் எனவும், மக்ரோன் மீதான கோபத்தினை வெளிப்படுத்தும் நோக்கில் புகைப்படத்தை திருடிச் சென்றுள்ளனர்.

சுற்றுச்சூழல் தொடர்பான மக்ரோனின் நிலைப்பாட்டில் திருப்த்தி இல்லை என தெரிவிக்கப்பட்டு அவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் குறித்த இருவரையும் Remoulins நகரில் வைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சில் மொத்தமாக 124 மக்ரோனின் புகைப்படங்கள் நகரசபைகளில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor