சோகத்தில் முடிந்த படகுச் சவாரி! – மூன்று சிறுவர்கள் பலி..!!

நேற்று திங்கட்கிழமை படகுச் சவாரி செய்துகொண்டிருந்த மூன்று சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

பிரான்சின் வடக்கு பிராந்தியமான Normandy மாகாணத்தின் Agon-Coutainville நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 3:30 மூன்று பெரியவர்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் உட்பட ஆறுபேர் படகுச் சவாரி மேற்கொண்டிருந்தனர்.

அதன்போது பலத்த காற்று வீசி படகு கவிழ்ந்தது. இதில் 7 வயது சிறுவன் ஒருவனும் 9 மற்றும் 13 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர். மீட்புக்குழுவினர் உடனடியாக அழைக்கப்பட்டபோதும் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

மூன்று பெரியவர்களும் மூச்சுத்திணறல் உட்பட சில காயங்களுக்கும் உள்ளாகினர். காவல்துறையினர் இது தொடர்பாக தெரிவிக்கும் போது, கரையில் இருந்து 800 மீற்றர்கள் தூரத்துக்கு கடலில் பயணித்துள்ளனர் எனவும், அவ்வளவு தூரம் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor