இலங்கை வரவுள்ள மோடி

இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அமோக வெற்றியை பெற்ற நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கையில் இருந்து குழுவொன்று புது டெல்லிக்கு சென்றது.

இதனை அடுத்து இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மனோ கணேசன், ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ரவ்ஃப் ஹக்கீம் ஆகியோர் அவருக்கான அழைப்பினை விடுத்துள்ளனர்.

அந்தவகையில் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி பிரதமரின் மாலைதீவுக்கான விஜயத்தினை அடுத்து ஜூன் 9 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தருவார் என அமைச்சர் ரவ்ஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor