குழந்தை பராமரிப்பு நிலையத்தில் தீ விபத்து!!

அமெரிக்காவில் குழந்தைகள் பராமரிப்பு நிலையமொன்றில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள இரி என்ற நகரத்தில் 24 மணிநேரமும் இயங்கும் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்று அமைந்துள்ளது.

பணி நிமித்தம் செல்லும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பராமரிப்பதற்காகவும், அவர்களது திறமையை வளர்ப்பதற்காகவும் அந்த நிலையத்தில் சேர்த்து விடுவது வழக்கம்.

இந்த நிலையில், அந்த பராமரிப்பு மையத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் குழந்தைகள் மற்றும் பராமரிப்பு மையத்தின் ஊழியர்களும் அதில் சிக்கிகொண்டனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்களும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து பராமரிப்பு நிலையத்தில் சிக்கித் தவித்த ஒரு குழந்தை உட்பட 7 பேரை பாதுகாப்பாக மீட்டனர்.

அவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.

எனினும், மீட்புகுழுவினர் வருவதற்கு முன்னர் 5 குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் பிறந்து 8 மாதம் முதல் 7 வருடங்களுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor