ரஷ்யாவின் ரகசிய அணு ஏவுகணை சோதனை!

ஆர்க்டிக் துருவ பகுதியில் ரஷ்யாவின் ஏவுகணை பரிசோதனை பல விதமான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

அண்மையில் ஏவுகணையின் இயந்திரம் வெடித்ததில் ஐந்து ரஷ்ய அணு விஞ்ஞானிகள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள், மொஸ்கோவிலிருந்து கிழக்கே 373 கி.மீ தொலைவில், அணு ஆயுதங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் இருக்கும் சரோவ் பகுதியில் புதைக்கப்பட்டன.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வௌியிட்டுள்ள ரஷ்ய அணுசக்தி உற்பத்தி முகாமை, அணு சக்தி இயந்திர சோதனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளதுடன், அதற்கு மேல் அவர்கள் எந்த தகவலையும் அளிக்கவில்லை.

இந்த பரிசோதனையானது ஆர்க்டிக் கண்டத்தின் பெருங்கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யா முன்னரே கப்பலில் இருந்து ஏவப்படும் அணுவாயுத ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ஆனால், கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது எந்த மாதிரியான அணு சக்தி பொறி என்பது குறித்து அவர்கள் விளக்கமளிக்கவில்லை.

ஏவுகணை விபத்துக்குள்ளாகி வெடித்த பின்னர் நாற்பது நிமிடங்கள் வரை அணு கதிர் வீச்சு சியவரோவின்ஸ்க் பகுதியில் பரவியிருந்தது.

இந்தப் பகுதியானது ஏவுகணை சோதனை செய்யப்பட்ட ஒயிட் கடற்பிராந்தியத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது.

ஆனால் நோய்களை ஏற்படுத்தும் அளவுக்கு அணு கதிர்வீச்சு உயரவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பொறியாளர்கள் ரோஸடாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Recommended For You

About the Author: Editor