
குளவிக்கூடுகளை அழிக்க, சீனாவில் புதிய உத்தி கையாளப்படுகிறது.
ஆளில்லா வானூர்தி மூலம் நெருப்பைக் கொண்டு குளவிக்கூடுகள் அழிக்கப்படுகின்றன.
உயரமான மரங்களில் குளவிகள் கட்டிய கூடுகளை சாம்பலாக்க அந்த ஆளில்லா வானூர்தி உதவுகிறது.
பார்க்க ஆறு கால் சிலந்திபோல் இருக்கும் ஆளில்லா வானூர்தி சீனாவின் மத்தியப் பகுதி கிராமவாசிகளின் கண்டுபிடிப்பு.
ஆளில்லா வானூர்தியில் எரிபொருள் தொட்டி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது, அதில் நீளமான குழாயும் உள்ளது.
குழாய் வழியே எரிபொருள் வெளியாகும். அதன் பின்னர் கீழிருந்து விசையை அழுத்தியதும், எரிபொருள் பற்றிக்கொள்கிறது.
குளவிக் கூடுகளைத் தேடித் தேடி அழிக்கிறது வானூர்தி.
குளவிகள் கொட்டிவிடுமோ என்ற அச்சத்தில் அவை அழிக்கப்படுகின்றன.
இருப்பினும் சிலர் குளவிகள் அழிக்கப்படுவதைக் குறைகூறியுள்ளனர்.