60 கோடி பார்வையாளர்களை தாண்டி, ரவுடி பேபி பாடல் சாதனை.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் ‘மாரி 2’ திரைப்படம் வெளியானது.

இத்திரைப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி தீ-யுடன் இணைந்து பாடிய ‘ரவுடி பேபி’ பாடல் யூடியூப் தளத்தில் தற்போது தொடர்ந்தும் சாதனைகளைப் படைத்து வருகின்றது.

பாடல் வெளியான நாளிலிருந்தே இரசிகர்களால் அடிக்கடி கேட்கப்படும் பாடலாகவும், யூடியூப் தளத்தில் அடிக்கடி பார்க்கப்படும் பாடலாகவும் அமைந்ததால் சுமார் 7 மாதங்களுக்குள்ளாகவே 60 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

சர்வதேச அளவில் இப்பாடலின் காணொளிக்கு கவனம் கிடைத்துள்ளதுடன் இதன் லிரிக்ஸ் காணொளி, மேக்கிங் காணொளி, தெலுங்கு காணொளி, அனைத்தையும் சேர்த்தால் 70 கோடியைக் கடந்துள்ளது. அதேநேரம் இந்தப் பாடல் 100 கோடி பார்வைகளைக் கடக்கும் என்பது இரசிகர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இந்த பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களையும் 157 நாட்களில் 500 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், அதிகமானோர் பார்வையிட்ட பாடலாக ‘ரவுடி பேபி’ பாடல் மிகப்பெரிய சாதனை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்