தமிழ் ரொக்கர்ஸ முடக்க உத்தரவு.

அனுமதியின்றி சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களை வெளியீடும் தமிழ் ரொக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ரொக்கர்ஸ் உள்ளிட்ட இணையதள முகவரிகளை முடக்க வேண்டும் என்று இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அந்த மனுவில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களை, ‘தமிழ் ரொக்கர்ஸ்’, ‘லைம்டோரென்ட்ஸ்’ உள்ளிட்ட இணையதளங்கள் அனுமதியின்றி வெளியிடுவதாகவும், இதனால் அந்த இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

மேலும், தமிழ் ரொக்கர்ஸ், இ,இசெட் டிவி, கேட்மூவிஸ், லைம்டொரன்ட்ஸ் போன்ற இணையதளங்கள், தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை வெளியிடுவதாகவும் இதனால் பெரும் இழப்பை சந்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ் ரொக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு அவர் இடைக் கால உத்தரவு பிறப்பித்தார். அதேநேரம் தயாரிப்பு நிறுவனங்களின் காப்புரிமையை மீறும் இணையதளங்களை இடைநீக்கம் செய்யுமாறு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்