நுவரெலியா மக்களுக்கு எச்சரிக்கை.

நுவரெலியா மாவட்ட மக்களை மண்சரிவு தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நுவரெலியா, கொத்மலை மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளது.

அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியதை அடுத்து நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் நிறுவகம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்சரிவிற்கான ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேறுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நிலம் தாழிறங்கல், கற்பாறைகள் சரிதல் மற்றும் நிலத்திலிருந்து திடீரென ஊற்றுகள் ஏற்படுதல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மேலும் அறிவித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்