
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- சந்தேகநபரிடமிருந்து 39 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.
பண்டத்தரிப்பு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் மறைத்துவைத்திருந்த நிலையில் இன்று (13) அதிகாலை கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 27 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கீரிமலை கடற்கரைப் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 83 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.