ஜனாதிபதி ஆணைக் குழுவினால் இருவருக்கு அழைப்பாணை

புத்தசாசன மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மாபொல புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் மின்சக்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் முன்பு மின்சார சபைக்கு மின் மாற்றிகளை கொள்வனவு செய்தமை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிப்பொருளை வழங்கியமை ஆகியவற்றின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் விசாரிக்கப்படவுள்ளது.


Recommended For You

About the Author: Ananya