இந்திய மீனவர்கள் நால்வர் கைது

இலங்கை கடற்பரப்பினை அண்மித்த நெடுந்தீவு கடற்பரப்பினுள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் நேற்று (12) இரவு காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இராமேஸ்வரம் பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

நேற்று இரவு ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்த போது இவர்களை கைது செய்தனர்.


Recommended For You

About the Author: Ananya