சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ செகண்ட்லுக்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை வெளிவந்தது.

இந்த படத்திற்கு ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த படத்தில் இரண்டாவது லுக் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிப்பு வெளிவந்த செய்தியையும் பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் இரண்டாம் லுக் வெளியாகி உள்ளது. இந்த இரண்டாம் நோக்கில் சிவகார்த்திகேயனுடன் ஒரு பெரிய கூட்டமே இருப்பதும், இதிலிருந்து இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களில் விவரங்கள் தெரிய வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், அர்ச்சனா, யோகி பாபு, சூரி, ஆர்கே சுரேஷ், ஆடுகளம் நரேன், ரமா உள்பட பல தெரிந்த முகங்கள் இந்த லுக்கில் உள்ளனர்.

இயக்குனர் பாண்டிராஜின் முந்தைய படமான ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தை பார்த்தோம்.

அதற்கு இணையாக இந்த படத்திலும் ஒரு பெரிய கூட்டம் இருப்பதால் இந்த படமும் ‘கடைக்குட்டி சிங்கம்’ அளவுக்கு குடும்ப ஆடியன்ஸ் ஆதரவால் வெற்றியடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 


Recommended For You

About the Author: Editor