பாடகியாக மாறிய பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறை விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டை சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா கன்னட படமொன்றில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். கன்னடத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பேயலதாதா பீமண்ணா’.

இந்தத் திரைப்படத்தில் ஒரு பாடலை ரூபா பாடியுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவித்தபோது, ‘இது இருவர் பாடும் டூயட் பாடல் கிடையாது.

நான் இந்துஸ்தானி இசையை கற்றிருக்கிறேன். அந்த அனுபவத்திலேயே இந்த பாடலை பாடினேன். இப்பாடலுக்காக ஒருவாரம் பயிற்சி எடுத்து பாடினேன், லதா மங்கேஸ்கர், வாணி ஜெயராம் ஆகியோரது பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது.’ என்று ரூபா கூறினார்.

ரூபா ஏற்கனவே கடந்த 1998ம் ஆண்டு ‘மிஸ் பெங்களூரு’ மற்றும் ‘மிஸ் தாவணகெரே’ பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor