யாழ்.பருத்துறையில் மூவருக்கு கொரோனா உறுதி!

யாழ்.பருத்துறையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 315 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பிலிருந்து பருத்துறைக்கு வருகைதந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருடைய குடும்பத்தினர் மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்


Recommended For You

About the Author: Editor