இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல நடிகை

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இன்றைய படப்பிடிப்பில் இந்த படத்தில் புதிதாக இணைந்த ரகுல் ப்ரீத்தி சிங் கலந்து கொண்டார்.

அவர் இந்த படத்திற்கான மேக்கப் சாதனங்களுடன் கூடிய ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்தியன் 2′ திரைப்படத்தில் இந்தியன் தாத்தா சேனாதிபதியின் பேரனாக சித்தார்த் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மேலும் முக்கிய கேரக்டர்களில் பிரபல நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெறும் என்றும் இந்த படம் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது


Recommended For You

About the Author: Editor