கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்!

கடந்த ஆண்டு ‘நடிகையர் திலகம்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘சீமராஜா’, ‘சாமி 2’, ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்’ என ஆறு தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இதுவரை ஒரு தமிழ் படத்திலும் கூட அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை

இதனை அடுத்து சமீபத்தில் அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் தற்போது மீண்டும் தமிழ் வாய்ப்புகள் குவிந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முதல் கட்டமாக கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ள நிலையில், அவரது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.

ஏற்கனவே ‘மேயாத மான்’ மற்றும் ‘மெர்குரி’ ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்த இந்நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், அணில் கிரிஷ் படத்தொகுப்பில், சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு. வரும் செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தேசிய விருது பெற்றதும் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாக முதல் தமிழ் படம் இது என்பதால் இந்த  படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor