குடிவரவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம் நாளை (சனிக்கிழமை) முதல் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட 3000 ரூபாய் நாளை முதல் 3500 ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

அத்தோடு ஒருநாள் சேவைக் கட்டணமாக இருந்த 10,000 ரூபாய் நாளை முதல் 15,000 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

இதேவேளை, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான விஷேட கடவுச்சீட்டுக்கு சாதாரண சேவையின் போது 2000 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாகவும், ஒருநாள் சேவையின் போது 5000 ரூபாயில் இருந்து 7500 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.


Recommended For You

About the Author: Editor