“மகளையும் கொடுத்து வேலை முடித்தான்” !!

இதைத்தான் “மகளையும் கொடுத்து வேலை முடித்தான்” என்று கவிஞர் காசி ஆனந்தன் ஏற்கனவே சொல்லயிருக்கிறார் போலும்..

“கூட்டமைப்பினர் முஸ்லிம் அரசியல்வாதிகளை போல இருக்க வேண்டும்.

அல்லது, வர்த்தகரான சரவணபவன் எம்.பி மாதிரியாவது இருக்க வேண்டும்.

அவர் தனது வர்த்தகத்திற்கு, குடும்ப தேவைகளிற்கு முன்னர் எம்.ஆரிடம் (மஹிந்த ராஜபக்ச) பலமுறை வந்தார். என்னிடமும் வந்தார். சீனாவிலுள்ள அவரது வர்த்தக தொடர்புகளிற்கு நாம் நிறைய உதவினோம்.

இந்த அரசுடனும் அப்படித்தான் இருக்கிறார். அண்மையில், ஐ.தே.க பிரமுகர் ஒருவர் சொல்லித்தான் தெரியும்- அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தில் சரவணபவனின் மகள் பணியாற்றுவது.

ரணிலை நச்சரித்து அந்த வேலையை பெற்றுக்கொடுத்தாராம். குறைந்த பட்சம் கூட்டமைப்பின் மற்ற எம்.பிக்களும் இப்படியிருந்தால், அந்தசமூகத்தில் அவர்களின் குடும்பங்களாவது முன்னேறிக் கொள்ளுமே“ என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor