அதிரடிப்படையினரின் நிலை!

மஹர சிறைக் கலவரம் குறித்து விசாரணை நடத்திவரும் குற்றப் புலனாய்வுப்பிரிவு குழு இன்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்கின்றது.

சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்து நேற்று சிறையிலுள்ள 56 அதிகாரிகளிடம் இந்தக் குழு வாக்குமூலம் பதிவுசெய்தது.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஈடுபடுத்தப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் 150ற்கும் மேற்பட்டவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகவலை அதிரடிப்படை கட்டளை அதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹர சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 11 கைதிகள் பலியானதுடன், 108 பேர்வரை காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor