பிரபல தொழிலதிபர் ரத்துல்புரியின் சொகுசு பங்களா பறிமுதல்!!

பிரபல தொழிலதிபர் ரத்துல்புரியின் சொகுசு பங்களா உள்ளிட்ட ஏனைய சொத்துக்கள் சிலவற்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் உறவினரான ரத்துல்புரி மீது அகஸ்டாவெஸ்ட்லாண்ட் ஊழல் வழக்கில் பினாமியாக செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே டெல்லியில் டாக்டர் அப்துல்கலாம் சாலையிலுள்ள ரத்துல்புரி wமற்றும் அவர் தந்தை தீபக்புரியின் சொகுசு பங்களா உள்ளிட்ட பலநூறு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளையும் 40 மில்லியன் டொலர் அந்நிய முதலீடுகளையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தியாவிலுள்ள சில தொழிலதிபர்கள் மேற்கொள்ளும் ஊழல் மற்றும் மோசடி ஆகியவற்றினை கண்டறிந்து அவர்களின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor