புதிய வசதியை அறிவித்துள்ள வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பூமராங் போன்ற அம்சத்தை விரைவில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பூமராங் அம்சத்தினால் வீடியோக்களை கஸ்டமைஸ் செய்து மகிழ முடியும்.

வீடியோக்களில் வித்தியாசமாக மாற்றிக் கொள்ளும் இந்த அம்சம் இன்ஸ்டா பயனர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வருகிறது.

இதேபோன்ற அம்சம் வாட்ஸ்அப் செயலியிலும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பயனர்கள் தங்களது வீடியோக்களை பல்வேறு விதங்களில் லூப் செய்ய முடியும். பல்வேறு புதிய அம்சங்களுடன் பூமராங் அம்சமும் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

பூமராங் வீடியோக்களை அதிகபட்சம் 7 நொடிகள் வரை உருவாக்கி அதனை பயனர்கள் தங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

அத்துடன் இவ்வாறான வீடியோக்களை பயனர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் வைக்கும் வசதியும் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor