நாம் செய்தவற்றை எந்த ஊடகமும் வெளிப்படுத்தவில்லை :- சுமத்திரன்

எமது முயற்சியால் நாம் செய்தமை தொடர்பில் எந்த ஊடகமும் உங்களுக்கு (மக்களுக்கு) வெளிப்படுத்தாது என்று சுமந்திரன் எம்பி தெரிவித்துள்ளார்.

இன்று (12) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

சமஷ்டி கட்சி என இலங்கை தமிழசு தமிழரசு கட்சிக்கு பெயரை வைத்திருந்துவிட்டு 1976ம் ஆண்டு தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்த போது சமஷ்டி கட்சி தனிநாடு கோருவதாகவும், எமது தலைவர்கள் சொன்னது சரிதான், சமஷ்டி என்றால் தனிநாடு என சிங்கள மக்கள் நினைத்தனர். என்றார். இதைக் கூறும்போது அதற்கிடையில் (1976ம் ஆண்டு செய்ததை தவறு என்று சொல்ல வரவில்லை. இல்லையென்றால் தனிநாடு கேட்டது தவறு எனச் சொல்லிவிட்டதாக சக்தி தொலைக்காட்சியில் கூறுவார்கள்) இவ்வாறும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசுகையில்,

எத்தனை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, எத்தனை வழக்குகளை வென்றோம், எவ்வளவு நிலம் விடுவிக்கப்பட்டிருக்கிறது, எத்தனை கைதிகள் விடுக்கப்பட்டனர் எமது முயற்சியால் என்பதை எந்த ஊடகமும் உங்களுக்குச் சொல்லாது. என்ன செய்கிறார்கள். முண்டு கொடுக்கிறார்கள் என்று தான் சொல்லுவார்கள்.

அரசை காப்பாற்றுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ஐதேகவிற்கு நீதிமன்றம் போக துணிவிருக்கவில்லை. நாங்கள் தான் செய்தோம். சமபந்தன் ஐயா தான் முதலாவது வழக்கை தாக்கல் செய்தார். என்றார்.


Recommended For You

About the Author: Ananya