ஆர்ப்பாட்டத்தால் ஹொங்கொங் விமான சேவைகள் ரத்து

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையம் அனைத்து வௌிச் செல்லும் விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

விமான நிலையத்தின் பிரதான முனையத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று (திங்கட்கிழமை) நான்காவது நாளாக தொடர்கின்றமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பரபரப்பான முனையங்களில் ஒன்றான ஹொங்கொங் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

இது தொடர்பில் விமான நிலைய நிர்வாகம் வௌியிட்டுள்ள அறிக்கையில், ‘பொது மக்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் காரணமாக தமது செயற்பாடுகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் பொலிஸாரின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர். நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தாத வெடிமருந்துகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்