ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைவருடனும் பேசுவோம்.

ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடவுள்ள சகல தரப்பினருடனும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவாா்த்தை நடாத்தும் என வடமாகாணசபை அவை தலைவரும், தமிழரசு கட்சியின் சிரேஸ்ட துணை தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளாா்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,  “தமிழ் மக்களுக்கு நாம் என்னென்ன தேவை எனக் கோருகின்ற போது, அவற்றை நாம் செய்வோம் எனக் கூறுபவர்களுக்கும், அவற்றை சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக துணிந்து சென்று கூறக் கூடிய தரப்புக்கும் நாம் ஆதரவு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்க முடியும்“ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: ஈழவன்