
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது.
இந்த நிலையில், புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும்.
மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தென் தமிழகத்தில் கனமழையும் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது