சிறுமிகளை வன்புணர்ந்த அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை.

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர், மன்ஹட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் நிதி நிறுவன தலைவராகவும், கோடீஸ்வரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவரே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மன்ஹட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது சொகுசு வீடுகளில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் எப்ஸ்டீனை கடந்த மாதம் கைது செய்து, மன்ஹட்டன் சிறையில் தடுத்து வைத்தனர்.

இந்த நிலையில், மன்ஹட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் வௌியிடப்படவில்லை.

இதுதொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


Recommended For You

About the Author: ஈழவன்