
கிழக்கு சீனாவை தாக்கிய லெகிமா (Lekima) சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இயற்கை அனர்த்தங்களினாலும், அசாதாரண காலநிலையாலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் சூறாவளியால் போக்குவரத்து பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில், ஆயிரக்கணக்கான விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. திடீர் வெள்ளத்தாலும், நிலச்சரிவுகளாலும் 170,000 ஹெக்ட்டயருக்கும் அதிகமான விளைநிலங்கள் சேதமடைந்தன.
இதுதவிர சூறாவளி காரணமாக 34,000 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூறாவளியால் மொத்தமாக 2 பில்லியன் டொலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக, Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.