மலையகத்தில் கடும் மழை.

நுவரெலியா, ஹட்டன், கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக இன்று(திங்கட்கிழமை) காலை கொட்டகலை கிறிஸ்னஸ்பாம் தோட்ட பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

குறித்த பகுதியிலுள்ள ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மரம் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 


Recommended For You

About the Author: ஈழவன்