
மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக களனி ஆற்றை அண்மித்த பகுதியில் வசிப்பவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, நுவரெலியா, ஹட்டன், கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக இன்று(திங்கட்கிழமை) காலை கொட்டகலை கிறிஸ்னஸ்பாம் தோட்ட பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.