ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்?

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நிவர் புயல் குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ருவிட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞர் வைரமுத்து பதிவு செய்துள்ள கவிதை ஒன்று வைரலாகி வருகின்றது.

புயலே
போய்விடு

பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்

வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்

குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்

பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்

சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு

ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?


Recommended For You

About the Author: ஈழவன்