தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை!

நிவர் புயலை எதிர்கொள்ளவுள்ள 13 மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று  பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை 13 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை வழங்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor